'' I have fought and brought rebirth '' - Minister who shed tears in the Legislative Assembly!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110- ன் கீழ் கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன், தங்க நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார். இந்த நிலையில்இன்றும்சட்டப்பேரவை கூட்டம்தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisment

'' I have fought and brought rebirth '' - Minister who shed tears in the Legislative Assembly!

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் பேசியஉணவுத்துறை அமைச்சர் காமராஜ்''மீண்டும் உயிருடன் வருவேனாஎன்றிருந்த நிலையில்போராடி மறுபிறவி எடுத்துவந்துள்ளேன். முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி சொல்ல கடன்பட்டிருக்கிறேன்'' எனல் கண்ணீர் மல்க பேசினார்.

Advertisment

அண்மையில் அமைச்சர் காமராஜ் கரோனாவால்பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.