Advertisment

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியிருக்கிறேன்; போட்டோ எடுத்து வைக்கவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

pon ratha

Advertisment

’’பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பின்பு, பல கடைக்கோடி மக்களுக்கு பல திட்டங்கள் சென்றடைந்துள்ளன. பிரதமர் மோடி ஒவ்வொரு திட்டத்திலும் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். இதையெல்லாம் ஊடகங்கள் மக்களிடம் கொண்டு செல்லுங்கள்’’ என்று செய்தியாளர்களிடம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

அவர் மேலும், ‘’தமிழகத்தில் சமீபகாலமாக நடக்கிற போராட்டங்கள் அனைத்தின் பின்னாலும் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் உள்ளனர். தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர். இதனால் தமிழகத்தில் தேவையில்லாத சம்பவங்கள் நிகழ்கிறது. தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தி.மு.க-வும், காங்கிரஸும் தான் காரணம். அவர்கள்தான் ஸ்டெர்லைட் ஆலை வருவதற்கு அனுமதி அளித்தவர்கள். அதற்கான ஆதாரங்கள் இங்கே உள்ளது. அவர்கள் அனுமதி கொடுத்துவிட்டு இப்போது வேஷம் போடுகிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், கூடங்குளத்துக்கு எதிராகவும் நான் போராடி இருக்கிறேன். அதை எல்லாம் போட்டோ எடுத்து வைத்துக்கொள்ளாதவன் நான். கலைஞர் செயல்பாடு இருந்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நிகழ்ந்திருக்காது. தமிழக அரசின் பின்னணியிலோ முன்னணியிலோ பி.ஜே.பி இல்லை. தமிழக அரசு செயல்படாமல் உள்ளது. தமிழர்களுக்கு தொடர்ந்து நன்மை செய்து வரும் பி.ஜே.பியை மக்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டால் சந்தோஷப்படும் முதல் ஆள் நான்தான்’’என தெரிவித்தார்.

Sterlite pon.rathakrishnan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe