Skip to main content

'வந்துட்டேன் அம்மா...'- 10 மணி நேரத்திற்கு பின் குட்டியானை மீட்பு

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
 'I have come mother...'- Rescue the cub after 10 hours

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக வனவிலங்குகள் ஊருக்குள் புகுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக காட்டு யானைகள் அதிகப்படியாக உலா வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பந்தலூர் கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று இரவு யானை கூட்டம் ஒன்று வந்துள்ளது.

அப்பொழுது கூட்டத்திலிருந்த குட்டி யானை 30 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்தது. இதனால் உடன் வந்த யானைகள் சத்தமிட்டது. இரவு முழுக்க குட்டி யானை கிணற்றுக்குள் கிடந்தது. யானைக் கூட்டமும் அங்கிருந்து நகராமல் சத்தமிட்டுக்கொண்டே இருந்தது. யானை கூட்டத்தின் சத்தம் ஊர் மக்களுக்கு அச்சத்தைக் கொடுத்தது.

என்ன நடந்தது என அந்த பகுதி மக்களுக்கு தெரியாமல் இருந்த நிலையில் காலையில் சென்று பார்த்த பொழுது கிணற்றுக்குள் குட்டி யானை விழுந்தது தெரிந்தது. உடனடியாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைக் கூட்டங்களை விரட்டி விட்டு குட்டி அணையை மீட்கும் பணியில் இறங்கினர்.

 'I have come mother...'- Rescue the cub after 10 hours

தொடர்ந்து 10 மணி நேரத்திற்கு மேலாக மீட்புப் பணிகள் நடைபெற்றது. ஜேசிபி மூலம் பக்கவாட்டில் குழிதோண்டி குட்டியானை வெளியே வரும் வகையில் பாதை அமைக்கப்பட்டது. அதன் வழியாக குட்டியானை வெளியே வந்தது. அதன்பிறகே வனத்துறையினரும், பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தற்போது உயிருடன் மீட்கப்பட்ட குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்கும் பணியை வனத்துறை தொடங்க உள்ளது. குட்டியானையை மீட்கும் பணியை தாய் யானை புதர் வழியாக நின்று நோட்டமிட்ட காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சார்ந்த செய்திகள்