“அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன்” - சசிகலா பேட்டி

I have been trying to unite ADMK Sasikala interview

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல் முறையாக சசிகலா கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்குசென்றுள்ளார். அங்குள்ள எஸ்டேட் பங்களாவில் 3 நாட்கள் சசிகலா தங்க உள்ளார். மேலும் கொடநாடு எஸ்டேட் முன்பாக ஜெயலலிதா சிலை அமைப்பதற்கான பூமி பூஜை நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவில் வி.கே. சசிகலா பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில் கொடநாட்டில் செய்தியாளர்களை சந்தித்தார் சசிகலா. அப்போது அவர் கண்ணீர் மல்கப் பேட்டியளித்தார். அதில், “கொடநாடு எஸ்டேட் தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பார்க்க வந்துள்ளேன். ஆனால், இப்படி ஒரு சூழ்நிலையில் வருவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு, ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையைப் பெற்றுத் தருவார் என நம்புகிறேன். கொடநாடு பங்களாவில் ஜெயலலிதாவிற்குப் பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். விரைவில் அவரது சிலை திறக்கப்படும்.

அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன். அந்த முயற்சி விரைவில் வெற்றி பெறும். அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டுத்தர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். சுமார் 7 ஆண்டுகள் கழித்து சசிகலா கொடநாடு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

admk kodanadu sasikala
இதையும் படியுங்கள்
Subscribe