

கடந்த 5 தினங்களுக்கு முன், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி டெல்லி சென்றதும், ‘பா.ஜ.க. முக்கிய தலைவர்களைச் சந்திக்கிறார்; பா.ஜ.க.வில் இணைகிறார்’ என ஹேஸ்யங்கள் எழுந்தன. இது தொடர்பான செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கு நேரடியாக ராஜேந்திரபாலாஜி மறுப்பு தெரிவிக்காத நிலையில், சேலத்தில் பேட்டியளித்த அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, “ராஜேந்திரபாலாஜி சொந்த வேலைக்காக டெல்லி சென்றுள்ளார். திட்டமிட்டு அவர் குறித்து அவதூறு தகவல்கள் பரப்பப்படுகின்றன. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் இருப்பவர், பா.ஜ.க.வில் இணையமாட்டார்.” என்றார்.
இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய ராஜேந்திரபாலாஜி, ‘எப்பவும் நான் அதிமுகதான்!‘ என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில், ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்திருக்கிறார்.