Advertisment

 ‘நான் அரளிவிதையை குடிச்சுட்டேன்..’ - சகோதரிக்கு சொல்லிவிட்டு உயிரைவிட்ட முதியவர்! 

‘I drank arali seeds ..’ - The old man who died after telling his sister!

Advertisment

திருச்சி மாவட்டம், வையம்பட்டி பொத்தப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நல்லுசாமி(58). இவருக்கு கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு சந்திரா(44) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நல்லுசாமி மதுவுக்கு அடிமையாகி, வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சந்திரா கணவரை பிரிந்து தன்னுடைய சகோதரர் வீட்டில் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார்.

நல்லுசாமி தன்னுடைய சகோதரியின் வீட்டில் வசித்து வருகிறார். இதனிடையே கடந்த 16ஆம் தேதி மதியம் பொத்தப்பட்டியில் உள்ள நல்லுசாமியின் சகோதரி லீலா வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, செல்போன் மூலம் லீலாவை தொடர்பு கொண்ட நல்லுசாமி அரளி விதையை அரைத்து குடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். நல்லுசாமி எங்கு உள்ளார் என்று பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் நல்லமுத்து கார்டன் பகுதியில் இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்து வையம்பட்டி காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe