'I don't know why only his film is facing controversy'-M.P. Interview with Vijay Vasant

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

விஜய்யின் பிறந்தநாளான கடந்த 22 ஆம் தேதி, இப்படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்பாடல் சில விமர்சனத்தையும் எதிர்கொண்டது. பாடல் முழுவதும் விஜய் புகைபிடித்துக் கொண்டே நடனமாடியது மற்றும் பாடல் வரிகளில் மதுபானம் போன்றவை இடம்பெற்றிருந்ததாலும் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் இருந்தது. இதனைக் கண்டித்து பாமகதலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருந்தார்.மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விஜய் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் ஆன்லைன் வாயிலாகப் புகார் அளிக்கப்பட்டது. இது பரபரப்பை கிளப்பிய நிலையில், எதிர்ப்புகளின் எதிரொலியாக 'புகைப் பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும்;உயிரைக் கொல்லும்' என்ற எச்சரிக்கை வாசகத்தை இணைத்தது படக்குழு.

Advertisment

தொடர்ந்து இப்பாடலுக்கு எதிராக டி.ஜி.பி அலுவலகத்தில் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா புகார் மனு கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விஜய்க்கு 2 வயது உள்ள சிறு குழந்தைகளும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அதனால் கூடுதலான தாய்மை உணர்வு எனக்கு இருக்கத்தான் செய்யும். விஜய் சிகரெட் பிடிப்பதை 3 வயது சிறுவன் பார்க்கும் போது தானும் பெரிய ஆளாகி அவரை போல் சிகரெட் பிடிக்க நினைத்தால் யாராவது தடுக்க முடியுமா? என ஆவேசமாகப் பேசியிருந்தார்.

இந்த நிலையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''லியோ படத்தின் முதல் வீடியோ வந்தது. அது பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது. ஆனால் பல மில்லியன் வியூவ்ஸை தாண்டி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று மீண்டும் அவர் நடித்த காட்சிகளை வைத்து அவரை கைது செய்ய வேண்டும் என்று ஒரு புகாரை கொடுத்துள்ளார்கள். எனக்கு புரியவில்லை என்ன காரணத்தை வைத்து அப்படி சொல்கிறார்கள் என்று. எல்லோரும்ஒரு அரசியல் நோக்கத்தோடு அல்லது விளம்பர நோக்கத்தோடு செயல்படுகிறார்கள். விஜய் படங்களுக்கு மட்டும் ஏன் இப்படி வருகிறது. அவர் அரசியலுக்கு வரலாம் என்று இருப்பதால் திசை திருப்ப பயன்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை.மெர்சலில் இருந்து தொடர்ந்து விஜய் படங்கள் ஏதாவது ஒரு சர்ச்சைக்கு ஆளாகிறது. கண்டிப்பாக திரைப்படத்தை திரைப்படமாக பாருங்கள் என்பதுதான் என்னுடைய கோரிக்கை'' என்றார்.

Advertisment