நானி, ராணாவின் தம்பி, ராகவா லாரன்ஸ், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பயன்படுத்திக்கொண்டனர் என்று தெலுங்கு துணை நடிகை ஸ்ரீரெட்டி சர்ச்சையை ஏற்படுத்தினார். தமிழகத்தை சேர்ந்த சில பிரபலங்கள் பேரும் இவர் லிஸ்ட்டில் இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது சென்னையில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி, சில தமிழ் படங்களிலும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

sri reddy

இந்நிலையில் திமுக இளைஞரணி தலைவரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் குறித்து ஸ்ரீரெட்டி பாலியல் புகார் தெரிவித்திருப்பதுபோல சமூக வலைதள பதிவு ஒன்று உலா வந்தது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார் ஸ்ரீரெட்டி.

அப்போது பேசுகையில், “உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது. உதயநிதியை பற்றி தவறுதலாக போடப்பட்ட பதிவு, எனது கணக்கு இல்லை போலியான கணக்கு, உதயநிதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்” என்றார்.

Advertisment

மேலும் அரசியல் குறித்து பேசியவர்,“வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்னையும் வாழ வைக்கும் என நம்புகிறேன். மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன். தமிழலத்தில் மிக முக்கியமான கட்சி ஒன்றில் சேர இருக்கிறேன். தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன்” என்று கூறினார்.