Advertisment

சுப்பிரமணிய சாமிக்கு பதிலடி கொடுத்த தயா அழகிரி..!

dhayaa

Advertisment

மனநோயாளிகளுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை என சுப்பிரமணிய சாமிக்கு மு.க.அழகிரி மகன் தயா அழகிரி பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னதாக, நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்றும், அழகிரியால் இட்லி கடை மட்டும் தான் வைக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அண்மையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை கடுமையாக விமர்சித்த தயா அழகிரி, சுப்பிரமணிய சுவாமியின் விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டார் என கடும் கண்டனம் எழுந்தது.

மேலும், இதுகுறித்து தயா அழகிரி டிவிட்டர் பதிவிலும் நேரடியாக பலர் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக ‘மனநோயாளிகளுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை’ என தயா அழகிரி தெரிவித்துள்ளார்.

dhaya alagiri mk alagiri Subramanian Swamy
இதையும் படியுங்கள்
Subscribe