Skip to main content

’நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார் 

Published on 13/11/2018 | Edited on 13/11/2018

 

j

 

பாஜக ஆபத்தான கட்சியா? இல்லையா? என்று திரும்பத்திரும்ப செய்தியாளர்கள் கேட்ட கேள்வியை அவர்களிடமே திரும்பத் திரும்ப கேட்டு ஹா..ஹா..என்று சிரித்து மழுப்பினார் நடிகர் ரஜினிகாந்த்.  இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில்,  பாஜக ஆபத்தான கட்சிதான் என்கிற நிலையில் பதிலளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

இந்நிலையில்,  சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது,  தமிழகத்தை பொறுத்தவரைக்கும் பாஜக ஆபத்தான கட்சியா? இல்லையே? என்று கேள்வி எழுப்பியபோது,  ‘’மத்திய அரசிடம் தமிழகத்திற்கு தேவையான உரிமைகளை பெற்று வருகிறோம்.  மற்றபடி, எந்த கட்சி நல்ல கட்சி என்று சர்ட்டிபிகேட் கொடுக்க சென்சார் போர்டு கிடையாது’’ என்று நழுவினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. புகார் மனு!

Published on 05/04/2021 | Edited on 05/04/2021

 

ADMK CANDIDATE AND MINISTER JAYAKUMAR MEET TAMILNADU CHIEF ELECTION OFFICER

 

கொளத்தூர், திருச்சி மேற்கு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை, காட்பாடி ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் திமுக பணப்பட்டுவாடா செய்வதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார் ராயபுரம் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ஜெயக்குமார்.  

 

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜெயக்குமார், "வாக்காளர்களுக்கு திமுகவினர் பணப்பட்டுவாடா செய்கின்றனர். ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலும் கூகுள் பே மூலம் நவீன முறையில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணப்பரிமாற்றம் செய்து வருகின்றனர். திருமங்கலம் ஃபார்முலாவை திமுக இன்னும் பின்பற்றுகிறது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி செயல்படக் கூடிய தனியார் தொலைக்காட்சியைத் தடை செய்ய வேண்டும். கொளத்தூர், திருச்சி மேற்கு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை, காட்பாடி ஆகிய தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ஜனநாயகத்தைப் பணநாயகத்தால் வென்றுவிடலாம் என திமுக நினைக்கிறது" என குற்றம்சாட்டினார். 

 

 

Next Story

"தேர்தலில் பெண்களுக்கு அ.தி.மு.க. அதிமுக்கியத்துவம் தரும்"- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

Published on 11/12/2020 | Edited on 11/12/2020


 

bharathiyar birthday tamilnadu ministers chennai

மகாகவி பாரதியாரின் 139- வது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் பாண்டியராஜன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். 

 

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், "சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டத்தோடு, பெண் விடுதலைக்கும் குரல் கொடுத்தவர் பாரதியார். கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் அரசியலில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தன் உயிரை பொருட்படுத்தாமல், மக்களோடு மக்களாக இருப்பவரே தலைவர்.

 

சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படும். பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டுக்கு உத்தரவிட்டது ஜெயலலிதா ஆட்சி தான். முழுமையான மதிப்பீடு செய்துள்ளதால் சேதமடைந்த அனைத்து சாலைகளும் விரைவில் சீரமைக்கப்படும்." என்றார்.