புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகில் உள்ள ஒக்கூர் கரூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அங்கே இங்கே கடன் வாங்கி ஆவுடையார்கோவிலில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் விற்பனையகத்தில் புதிதாக இருசக்கர வாகனம் வாங்கினார். அப்போதே வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன பதிவுக்காக ஆவணங்களையும் கொடுத்தார்.

Advertisment

அடுத்த சில நாட்களில் வாகன பதிவு எண் கொடுத்தார்கள் ஆனால் பதிவு சான்று கிடைக்கவில்லை. வாகனம் வாங்கிய இடத்தில் கேட்டால் பதிவு சான்று இன்னும் வரல வந்ததும் தருவோம் என்று பதில் கூறியுள்ளனர்.

bike

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காலதாமதம் ஏற்படுவதாக கூறியுள்ளனர். இப்படி பல நாட்கள் அழைந்த செல்வராஜ் இன்று அறந்தாங்கி வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்றார். இதற்கு முன்பும் பல முறை ஆர்சி புத்தகம் கேட்டு அலைந்துள்ளார் . ஆனால் அறந்தாங்கி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று வரை கிடைக்காதததால் விரக்தியின் உச்சத்திற்கே போன செல்வராஜ் இன்று ஆர்டிஓ அலுவகத்தில் தனது வாகனம் மற்றும் சாவியை அலுவலகத்தில் ஒப்படைத்தவர் எல்லா ஊர்லயும் வாகன சோதனை நடக்குது நான் ஆர் சி புத்தகம் இல்லாம அடிக்கடி அபராதம் கட்ட வேண்டியுள்ளது. இனி அபராதம் கட்ட என்னிடம் பணம் இல்ல.. அதனால ஆர் சி புக் தரும் வரை வாகனம் என்னிடம் இருப்பதைவிட அலுவலகத்திலேயே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு நடந்து சென்றுவிட்டார்.

bike

இந்த சம்பவத்தால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் அறந்தாங்கி வட்டார ஆய்வாளர் அசோக்குமார் நாளை ஆர்சி புக் கொடுப்பதாக கூறியுள்ளார்.

Advertisment

அறந்தாங்கியில் எந்த அலுவலகம் போனாலும் ஆண்டுக்கணக்கில் அலைய வேண்டும் என்பதை கடந்த சில நாட்களாக சிலர் சான்றோடு காட்டி வருகிறார்கள். போனவாரம்வட்டாட்சியர் அலுவகம் இந்த வாரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அடுத்து?