kamal

Advertisment

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில்,

காங்கிரசுடன் கூட்டணி இருக்கிறதா என்ற கேள்விக்கு இப்பொழுது பதில் சொல்லமுடியாது.

நான் ஐயப்பன் கோவிலுக்கு போனதே இல்லை மற்ற கோவில்களுக்கு சென்றுள்ளேன். என்னிடம் கருத்து கேட்பது சரியாக இருக்காது. பெண்களுக்கு எது நல்லதோ நாட்டிற்கு எது நல்லதோஅதைத்தான் நான் சொல்லுவேன். பக்தர்கள் சார்பு பற்றி எனக்கு புரியாது எனவே அதில் தலையிடாமல் இருப்பதுதான் நல்லது. காவேரி தீர்ப்பில் அரசு நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை. கேரளாவில் சபரிமலை தீர்ப்பைமக்கள் மதிக்கவில்லை இரண்டிற்கு வித்தியாசம் இருக்கு எனக்கூறினார்.

Advertisment

அரசியல் செய்ய கமலுக்கு அனுபவம் பத்தாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பற்றிய கேள்விக்கு,

அந்த கேள்விக்கெல்லாம் பதிலளிக்க நேரம் இல்லை என்றார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் உங்கள் நடிப்பு பிடிக்கும் ஆனால் கமலுக்கு அரசியல் அனுபவம் பத்தாது எனக்கூறியது தொடர்பான கேள்விக்கு,

எனக்குதுரைமுருகனின் நடிப்பு பிடிக்காது அதற்காக என்னசெய்வதுஎனக்கூறினார்.