Advertisment

’நான் சீனிவாசன்  சொல்லும் அம்மாவைச்  சொல்லவில்லை! ’ - வெங்காயநாயுடு  பேச்சு

vi

திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம பல்கலைகழகத்தில் 34-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இந்த விழாவிற்க்கு பல்கலைகழக வேந்தர் அண்ணாமலை தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு மற்றும் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்காயாநாயுடு மாணவ மாணவிகளுக்கு

பட்டம் வழங்கி விட்டு பேசும் போது.... தமிழ் மக்களும், தமிழும் என் மனதிற்கு நெருக்கமானவை. சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளாகியும் கிராமங்கள் பின்தங்கியே உள்ளன. 4 வழிச்சாலை, சுற்றுச்சாலை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் பின்தங்கி உள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயம்தான் அடிப்படை.

Advertisment

வெளிநாட்டு கலாச்சாரமும் , மோகமும் தற்போது அதிகரித்துள்ளது. மற்றநாடுகளைப் போல இறக்குமதி உணவுகளை நாம் சார்ந்திருக்க வேண்டும். இட்லி,தோசை போன்ற நமது பாரம்பரிய உணவுகளை எதனாலும் மிஞ்ச முடியாது. இருப்பினும் கிராம மக்களிடையே வைட்டமின் சத்துக்குறைபாடு இருந்து கொண்டே இருக்கிறது. கிராமங்களின் வளர்ச்சிதான் உண்மையான முன்னேற்றம். வேலை படிப்பு உள்ளிட்டவற்றிற்காக வெளிநாடு செல்லுங்கள், சம்பாதியுங்கள், ஆனால் இங்குள்ள கிராம மக்களுக்கு வந்து சேவை செய்ய மறக்காதீர்கள்.

va

ஒவ்வொரு மனிதனும் அம்மா, அப்பா வை மறக்கவே கூடாது. வீட்டில் தாய்மொழியிலே பேசுங்கள் . தாயை அம்மா என்று தான் அழைக்க வேண்டும். ( நான் திண்டுக்கல் சீனிவாசன் சொல்லும் அம்மாவை சொல்லவில்லை என்று சொன்ன உடனே பலத்த கைதட்டல் எழுந்தது ) மம்மி என்று அயல் மொழியில் பேசக்கூடாது. பிறந்த ஊரையும் ,நாட்டையும் நேசியுங்கள். தாய்மொழி என்பது கண்பார்வை போன்றது. பிறமொழிகள் கண்கண்ணாடி போன்றது. பார்வையில்லாமல் கண்ணாடி போட்டிருந்தாலும் பலனில்லை. எனவே தமிழை நேசியுங்கள். எதிர்காலத்தில் தாய்மொழியில் படிக்கும் சூழ்நிலை ஏற்படும்.

பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும் உணர்வால் நாம் இந்தியன் என்ற எண்ணம் வலுப்பெற்றிருக்க வேண்டும். சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளாகியும் 21 சதவீத மக்களுக்கு எழுதப்படிக்கத் தெரியவில்லை. 70 சதவீத மக்கள் ஏழ்மையில் உள்ளனர். எந்த வேலை பார்த்தாலும் அதற்கான அறிவை மேம்படுத்திக் கொள்வது அவசியம். பெண்கள் இந்தளவிற்கு கல்வியில் மேம்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

. நம் கலாச்சாரத்தை விட்டுத்தரக்கூடாது. வெளிநாடு எங்கு சென்றாலும் பாரம்பரிய உடையுடன் தான் செல்கிறேன் . ஆசிரியர்கள் வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் 3வது பெரிய நாடாக இந்தியா உள்ளது என்று கூறினார்.

அதன்பின் மருத்துவத்தில் சிறந்த சேவையாற்றிய டாக்டர் கவுசல்யாதேவி சிறந்த சமூகசேவையாளர் கிருஷ்ணம்மாள்ஜெகநாதன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.அதோடு பல்கலைக்கழக மாணவ மாணவிகள் 1250 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் வினைய்.மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்திவேல் உள்பட பல்கலைகழக பேராசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் அரசியல் வாதிகள் என பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

venkaiya naidu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe