Advertisment

"நான் அப்படி சொல்லவில்லை; அது போலியான பதிவு" - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

ghj

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

Advertisment

அதிமுக சார்பில் விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கர், தனது பிரச்சாரத்தில் தினம்தோறும் பல்வேறு தகவல்களைக் கூறிவருகிறார். அந்த வகையில் தனக்கு சுகர் இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு கூறிய அமைச்சர், நேற்று (30.03.2021) ‘எனக்கு வாக்களிக்கவில்லை என்றால் நான் உயிரை விட்டுவிடுவேன்’ என்று கூறியதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், தான் அவ்வாறு பதிவிடவில்லை என்றும், அது போலி செய்தி என்றும்தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக விஜயபாஸ்கர் தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

vijayabaskar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe