Advertisment

''நான் ராஜினாமா செய்யவில்லை!'' - கமலிடம் முறையிட்ட மக்கள் நீதி மய்ய மா.செ!!

'' I did not resign! '' - MC appealed to Kamal!!

அண்மையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணைத் தலைவர் மகேந்திரன் உட்பட பல நிர்வாகிகள் தங்களதுபதவிகளை ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளமக்கள் நீதி மய்யம்மாவட்டச் செயலாளர்கள் 4 பேர் ராஜினாமா செய்து கமலுக்கு திடீர் அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

Advertisment

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரனுக்கு ஆதரவாக கமல்ஹாசன் ஜனநாயகப் படுகொலை செய்ததாகக் கூறி திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் ஜப்பார், தென் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஓம்குமார், தென் மேற்கு மாவட்டச் செயலாளர் சிவசக்திவேல், வட மத்திய மாவட்டச் செயலாளர் கருப்பசாமி ஆகியோர்தங்கள் பொறுப்புகளிலிருந்தும், கட்சி உறுப்பினரில்இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.

Advertisment

இந்நிலையில் திண்டுக்கல் தென் மேற்கு மாவட்டச் செயலாளர் சிவசக்திவேல்நான் ராஜினாமா செய்யவில்லை. உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் இருக்கிறேன். மற்ற மாவட்டச் செயலாளர்கள் போல் ராஜினாமா செய்வதில்எனக்கு உடன்பாடு இல்லை என்னைக் கேட்காமலே இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது எனக் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து கமல்ஹாசனுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், ''நம்மவருக்கு என்றும் விசுவாசமாக இருந்து கட்சிப் பணி ஆற்றுவேன்'' என உறுதி அளித்துள்ளார்.

kamalhaasan Dindigul district MNM
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe