Advertisment

'அதற்காக நான் வரவில்லை'-ராமதாஸ் உடனான சந்திப்புக்கு பிறகு குருமூர்த்தி பேட்டி   

'I did not come for BJP' - Gurumurthy's interview after meeting with Ramadoss

பா.ம.க.வின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே கட்சிக்குத் தலைமை தாங்குவது, வழிநடத்துவது தொடர்பாகக் கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் கடந்த 29ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து, அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.

Advertisment

அதனைத் தொடர்ந்து 01/06/2025 அன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ''என்னை யாரும் இயக்க முடியாது. சுதந்திரம் கிடைத்துள்ளது என்று அன்புமணி சொல்வது அவருடைய கருத்து. அன்புமணி விகாரம் குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது எல்லா கட்சிகளிலும் நடக்கும் ஒன்றுதான்' என தெரிவித்திருந்தார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் பாமக நிர்வாகிகள் குறிப்பாக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து இன்று (05/06/2025) காலை தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி, ராமதாஸுடன் சந்திப்பு மேற்கொண்டனர். சுமார் 45 நிமிடம் இந்த சந்திப்பு நிகழந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகிய இருவரும் ஒரே காரில் வந்து தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் உடன் சந்திப்பு மேற்கொண்டனர்.

3 மணி நேர சந்திப்பிற்கு பிறகு வெளியே வந்த குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி காரில் அமர்ந்தபடி செய்தியாளர்களை சந்தித்தனர். குருமூர்த்தி பேசுகையில், 'ராமதாஸ் என்னுடைய நண்பர் சார். நீண்ட நாட்களாகவே என்னுடைய நண்பர். என்னை ரொம்ப பிடிக்கும் ராமதாஸுக்கு. பாஜகவிற்காக நான் வரவில்லை. நண்பர் என்ற காரணத்தினால் வந்தேன். இங்கு அன்புமணி ராமதாஸ் வந்ததே எனக்கு தெரியாது' என்றார்.

gurumurthy Ramadoss pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe