'I can't answer this' - Minister Jayakumar interview

Advertisment

சட்டமன்றத் தேர்தலுக்கானவாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கிறது. 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படஇருக்கிறது.

கரோனாபரவல் காரணமாக வாக்குப்பதிவேபல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கையைஎப்படிப் பாதுகாப்பாக நடத்துவது என்பது குறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுடன்தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹுஇரண்டு நாட்களாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ''மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தேர்தல் வாக்கு எண்ணும் நாளில்தான் குறிப்பாக தபால் வாக்குகள் எண்ணப்படவேண்டும். அதற்கு முன்னதாக எந்தச் சூழ்நிலையிலும்வாக்கு எண்ணும் நாளுக்கு முன்னாள் ஒன்றாம் தேதி தபால் வாக்குகள் திறக்கப்பட்டு கட்டுக்கட்டாகப் பிரிக்கக் கூடாது. வாக்கு எண்ணிக்கை நாளான மே இரண்டாம் தேதிதான்திறக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் பின்பற்றப்பட முறைபடிமே இரண்டாம் தேதிதான்தபால் வாக்கு பிரிக்கப்பட்டு எண்ணப்பட வேண்டும்" என்றார்.

சில தொகுதி ஸ்ட்ராங் ரூமில்சிசிடிவி வேலை செய்யாதது, கண்டெய்னர் லாரி சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''தேர்தல் ஆணையம் கிஞ்சித்தும் எவரும் குறைசொல்லமுடியாதஅளவுக்கு முழுமையாகத் தனது கடமையைச் செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. குறைகள் சொல்லப்பட்டிருந்தால் அதை நிவர்த்தி செய்வது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. எனவே நான் இந்த விஷயத்தில் பதில் சொல்ல முடியாது'' என்றார்.