/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jai ananth_0.jpg)
புதுக்கோட்டை போஸ் மக்கள் பணியகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்த போஸ் மக்கள் பணியக தலைவரும் அண்ணா திராவிடர் கழக இளைஞரணி செயலாளருமான ஜெய் ஆனந்த் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூறும் போது..
திருவாருர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அண்ணா திராவிடர் கழகம் போட்டியிட வாய்ப்பு உள்ளது. திருவாருரில் நடக்கும் இடைத்தேர்தலில் தலைமை உத்தரவிட்டால் நான் போட்டியிடுவேன்.
தற்போதைய தமிழக அரசு கட்சியை பலப்படுத்துகிறார்களோ இல்லையோ தனது பதவி காலமான 5 ஆண்டு காலம் பூர்த்தி செய்வார்கள். தினகரன் மன்னார்குடியில் பேசும் போது ஏழரை நாட்டு சனி எங்களுக்கு முடிந்து விட்டது என்று கூறியுள்ளார். எங்களுக்கு ஏழரை நாட்டு சனி முடிந்து விட்டது. ஆனால் அவருக்கு தொடங்கியுள்ளது.
மன்னார்குடியில் உள்ள ஒரு பவர்செக்டார் முடிந்து விட்டதாக தினகரன் எங்களை பற்றி விமர்சனம் செய்துள்ளார். ஆனால் உண்மையாக பவரை இழந்து இருப்பவர் தினகரன் தான். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா தினகரனிடம் பவர் செக்டாராக 122 எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியை ஒப்படைத்து விட்டு சென்றார். ஆனால் 18 எம்ஏல்ஏக்களை மட்டும் தங்கள் பக்கம் வைத்துக் கொண்டு கட்சியையும் ஆட்சியையும் இழந்து தனி கட்சி ஒன்றை தொடங்கி பவர் போய் தனியாக உள்ளவர் தினகரன் தான். தற்போது அவரது கட்சியிலேயே அவருக்கு எதிராக அதிருப்தி தலைதூக்கியுள்ளது.
ஓட்டிற்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் மாறி தற்போது ஓட்டிற்கு டோக்கன் கொடுக்கும் கலாசாரம் தலைதூக்கியுள்ளது. அடுத்த தலைவர் நான் தான் என்று கூறிகொள்பவர் தற்போது நல்ல கலாச்சாரத்தை நோக்கி தமிழகத்தை கொண்டு செல்லவில்லை. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் ஒரு ஓட்டிற்கு 22 ஆயிரம் ரூபாய் மற்றும் டோக்கன் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார். இது போன்று செலவு செய்தால் ஒரு லட்சம் வாக்கு அல்ல 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறலாம். அதிமுகவை தினகரன் கைப்பற்றுவார் என்ற நம்பிக்கை இல்லை என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)