Advertisment

'நான் தான் அந்த டாட்டூ ஆர்ட்டிஸ்ட்'-திருந்திய ஏலியன் ஹரிஹரன்

'I am that tattoo artist' -  transfixed Alien Hariharan

திருச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன் பாடி மாடிஃபிகேஷன் என்ற பெயரில் நூதன முறையில் ஆபரேஷன்களை செய்து வந்த டாட்டூ ஆர்ட்டிஸ்ட்டை தாமாக முன்வந்து போலீசார் கைது செய்திருந்தனர்.

Advertisment

திருச்சி மேலசிந்தாமணி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஹரிஹரன் பாடி மாடிஃபிகேஷன் என்ற பெயரில் நூதனமான முறையில் நாக்கை இரண்டாக கிழித்து நாக்கிற்கு வண்ணம் திட்டுவது, கண்களுக்குள் வண்ணம் தீட்டுவது போன்ற ஆபரேஷன்களை செய்து சமூக வலைத்தளங்களில் அது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.

Advertisment

முன்னதாக தன்னை இதுபோன்ற மாற்றங்களுக்கு உட்படுத்திக் கொண்ட அந்த இளைஞர் தன்னுடைய வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, நீங்களும் இதுபோல் செய்து கொள்ள வேண்டும் என்றால் என்னைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து பலரும் அவரிடம் நாக்கை இரண்டாக கிழித்து வண்ணம் திட்டிக் கொள்ளும் ஆபரேஷன் செய்து கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் குவிந்தது. மருத்துவக் கட்டுப்பாடுகளை மீறி இதுபோன்ற நூதனமான மற்றும் ஆபத்தான அறுவை சிகிச்சையை மேற்கொள்கின்றனர். இது இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல வழி காட்டுகிறது என்ற புகார் அடிப்படையில் ஹரிஹரன் மற்றும் ஜெயராமன் ஆகிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்துள்ள ஹரிஹரன் வெளியிட்டுள்ள வீடியோவில், ''நான் தான் டாட்டூ ஆர்ட்டிஸ்ட் ஏலியன் ஹரிஹரன். நான் பாடி மாடிஃபிகேஷன் டாட்டூ பண்ணுவதற்கு முறையான சான்றிதழ் பெறவில்லை. என்னுடைய பிராக்டிஸை வைத்து செய்து வந்தேன். இது சட்டபூர்வமாக தவறு என்பதை உணர்ந்தேன். டிஐஜி வருண்குமார் அறிவுறுத்தலின்படி கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. ஆட்சியர் தரப்பில் இருந்தும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. மனநல ஆலோசகர்கள் என்னிடம் பேசினார்கள். இதற்கு சான்றிதழ் பெறவேண்டும் இல்லை என்றால் செய்யக்கூடாது என்று சொல்லி இருந்தார்கள். அதை நான் புரிந்து கொண்டேன். இதுபோன்ற பாடி மாடிஃபிகேஷன் யாரும் பண்ணாதீர்கள். அப்படி செய்தால் என்னைப் போன்ற விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். எனவே இது மாதிரி யாரும் பண்ணாதீர்கள்' என தெரிவித்துள்ளார்.

police Tiruchi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe