Skip to main content

“தமிழகத்தில் முதல்முறையாக இதைப் பார்க்கிறேன்” - அண்ணாமலை

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

'I am seeing this for the first time in Tamilnadu' - Annamalai interview

 

கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வந்த விஜயகுமார், இன்று அதிகாலை தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, டிஐஜி தற்கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, ''டி.ஐ.ஜி விஜயகுமார் நம்முடன் உயிரோடு இல்லை என்ற செய்தி நிச்சயமாக நம் அனைவருக்கும் துக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதே காவல்துறையில் நானும் ஒன்பது ஆண்டுகாலம் பணியாற்றினேன் என்பதால் எனக்கு இன்னும் துக்கம் அதிகமாக இருக்கிறது. காரணம் விஜயகுமாரை பொறுத்தவரை இந்த பகுதியில் இருக்கக்கூடிய பத்திரிகையாளர்கள், பாஜக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் என அனைவருக்குமே நல்ல அதிகாரியாக இருந்ததால் அவர் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது.

 

நார்த் பகுதிகளில் மட்டுமே காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு துப்பாக்கியை வைத்து தற்கொலை செய்து கொள்வதை பார்த்துள்ளேன். ஆனால் தமிழகத்தில் முதல்முறையாக இதைப் பார்க்கிறேன். இதற்கு காரணம் ஆயிரம் இருந்தாலும் இரண்டு பொதுப்படையான காரணம் இருக்கிறது. காவல்துறையில் இருக்கக்கூடிய பணி அழுத்தம். காவல்துறையில் குறிப்பாக அடிமட்டத்தில் கான்ஸ்டபிள், ஹெட் கான்ஸ்டபிள், அசிஸ்டன்ட் சப் இன்ஸ்பெக்டர், ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர் இந்த கேட்டகிரியில் அவர்களுக்கு இருக்கக்கூடிய மன அழுத்தம் என்பது எந்த ஒரு துறையிலும் இல்லாத உச்சக்கட்ட அழுத்தம் இருக்கிறது. அதற்கு மேலே அதிகாரிகள், இன்ஸ்பெக்டர், டி.ஐ.ஜி, ஐ.ஜி இவர்களுடைய அழுத்தம் என்பது அட்மினிஸ்ட்ரேடிவ் மன அழுத்தம். ஒரு அரசியல் கட்சி வரும்பொழுது ஒரு மன அழுத்தம் வரும். எந்த ஒரு வடிகாலும் இல்லாமல் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தாண்டி வேலை செய்து கொண்டு இருப்பார்கள். காவல்துறையின் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்.

 

போர்க்கால அடிப்படையில் இரண்டு ஆண்டுகள் தமிழகத்தில் மொத்தமாக காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆயிரக்கணக்கான சகோதரர்கள் பந்தோபஸ்த் பணிக்கு வருகிறார்கள். ஆனால் அங்கு அவர்களுக்கு டாய்லெட் வசதி இல்லை. அதை எல்லாம் கொண்டு வர வேண்டும். குடிக்கின்ற தண்ணீரை எல்லா இடத்திலும் வைக்க வேண்டும். இன்னொன்று கம்பல்சரி வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை கொடுக்க வேண்டும். கர்நாடகாவில் நான் பணிபுரியும் போது இதை ஃபாலோவ் செய்தோம். விடுப்பு எடுத்தால் தான் அவர்கள் வேலை செய்ய முடியும். அவர்களுக்கு வருடத்திற்கு இரண்டு முறை 10 நாட்கள் அல்லது 15 நாட்கள் விடுமுறை கொடுக்க வேண்டும். நான் காவல்துறையில் பணியாற்றிய ஒன்பது வருடத்தில் மொத்தமாக 20 நாட்களுக்கும் கீழ் தான் விடுமுறை எடுத்திருப்பேன். அப்படி இருக்கும் பொழுது எப்படி மன அழுத்தத்தை சமாளித்து மக்களுக்குப் பணி செய்வார்கள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.