Advertisment

''இதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன்'' - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!  

சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை இன்று (26.06.2021) தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதேபோல் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு தலா 5 லட்சம் ஊக்கத் தொகையும் வழங்கினார்.

Advertisment

முதற்கட்டமாக 18 ஆயிரம் வீரர்களில் பத்தாயிரம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில், மீதமுள்ளோருக்குத் தடுப்பூசி போடப்படுகிறது. அதற்கான முகாம் இன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில்துவக்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ''விளையாட்டுத் துறையை விளையாட்டாக எடுத்துக்கொண்டால் விளையாட்டாக அது போய்விடும். விளையாட்டாக போய் விடக்கூடாது என்பதால்தான் விளையாட்டுத்துறை மேம்படுத்தப்பட்டுவருகிறது. விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.

Advertisment

விளையாட்டுத் துறையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும். குழந்தைகளின் விளையாட்டுத் திறனை ஆரம்பத்தில் இருந்தே கண்டறிய வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு உடல் உறுதியும் ஊக்கமும் அவசியம்'' என்றார்.

மேலும், ''ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டு வீரர்களுக்கு 3 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும். வெள்ளி வெல்வோருக்கு 2 கோடி ரூபாயும், வெண்கலம் வெல்வோருக்கு ஒரு கோடி ரூபாயும் பரிசுத் தொகை வழங்கப்படும். இதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன்'' என்றார்.

national sports day stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe