Advertisment

'நான் மட்டும் முதல்வன் அல்ல...'- மு.க.ஸ்டாலின் பெருமிதம்

 'I am not the only one who is the first...' - MK Stalin's pride

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இறுதி தேர்வு முடிகள் அடிப்படையில் 1009 பேர் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சக்தி துபே என்பவர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்கள் பலரும் யுபிஎஸ்சி தேர்வில் வென்றுள்ளனர். இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் 'எக்ஸ்' வலைதளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க ஸ.ஸ்டாலின், 'எது மகிழ்ச்சி? நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது!' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

TNGovernment mk stalin exam result upsc
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe