Skip to main content

''நான் நடிகன் அல்ல... யதார்த்தவாதி''-ஸ்டாலின் பேச்சு! 

Published on 07/02/2021 | Edited on 07/02/2021

 

 "I am not an actor ... I am a realist" - Stalin's speech

 

தமிழகம் மீட்போம், விடியலை நோக்கி, அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்புகளில் களமிறங்கியிருக்கும் தி.மு.க. அடுத்ததாக 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் தென் மாவட்டத்தில் அ.தி.மு.க.வின் அமைச்சர்கள், அக்கட்சியின் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளையே குறிவைத்து விளாசத் தொடங்கியிருக்கிறார்.

 

தென் மாவட்டத்தில் கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், அம்பை, சங்கரன்கோவில் என்று இலைத் தரப்புகளின் தொகுதிகளே குறிவைக்கப்பட்டுள்ளன.

 

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் குறிப்பாகக் கோவில்பட்டித் தொகுதியை 462 என்று மிகச் சொற்ப வாக்குகளிலேயே தி.மு.க. வாய்ப்பை ஜெ.விடம் பறிகொடுத்து எம்.எல்.ஏ.வாகி, பின்பு அம்மாவின் தயவால் அமைச்சரானவர் கடம்பூர் ராஜ் எம்.எல்.ஏ. அமைச்சர் என்று, 2011 முதல் 2021 வரை அதிகார பீடத்திலிருப்பவர் அமைச்சர் கடம்பூர் ராஜ்.

 

தென் மாவட்டத்தில் முதல் நிகழ்ச்சி, கோவில்பட்டித் தொகுதி என்பதால் ராமநாதபுரம் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கோவில்பட்டி வரகால தாமதமாகிவிடுமே என்று முதல் நாள் இரவு கோவில்பட்டி வந்த ஸ்டாலின் அங்குள்ள கே.ஆர். கல்லூரியின் விருந்தினர் மாளிகையில் தங்கியவர், மறுநாள் (பிப்.05) காலை ஷார்ப்பாக நிகழ்ச்சியின் ஷ்பாட்டிற்கு வந்து விட்டார்.

 

 "I am not an actor ... I am a realist" - Stalin's speech

 

போர்கால அடிப்படையில் உங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு. இதற்கு நான் பொறுப்பு என்ற ஸ்டாலினின் வாக்குறுதிகள் டாலடித்தன ஆண்டாண்டு தோறும் மனதில் தோன்றிய வார்த்தைகளால், கற்பனையையும் தாண்டிய அடைமொழிகளோடு தங்களின் கட்சித் தலைவர்களை வரவேற்று நகரமெங்கும் ப்ளக்ஸ்களால் போர்த்தப்படுவது கழகங்களின் தொண்டர்கள் பின் பற்றி வந்த நடைமுறைகள். அவைகள் மக்களால் முகம் சுளிக்குமளவுக்குப் போனதை தி.மு.க.வின் தரப்பில் கவனிக்கப்பட்டதது போல. இந்த ப்ளக்ஸ்களுக்காக் கழகங்களின் தொண்டர்கள், தங்களின் உழைப்பின் பெரும்பகுதியைக் காலி செய்வது மரபாகவே இருந்து வந்திருக்கிறது. இந்த விஷயத்தில் இம்முறை ஸ்டாலின் தரப்பில் கட்சித் தொண்டர்களுக்குக் கடுமையான கட்டளைகள். கட்சி நிர்வாகிகள், மற்றவர்கள் தலைவரை வாழ்த்திப் ப்ளக்ஸ்சுகள் வைக்கக் கூடாது. மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என அறிவுறுத்தப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகிற தலைவரை வரவேற்று 'ஸ்டாலின் தான் வாராரு... விடியல் தரப் போறாராரு...'' என்று ஒற்றை வரியில் மாவட்டக் கழகம் சார்பில்  மட்டுமே வரவேற்பு ப்ளக்ஸ் வைக்கப்பட்டது.

 

 "I am not an actor ... I am a realist" - Stalin's speech

 

நிகழ்ச்சியின் ஸ்பாட்டிற்கு வந்த ஸ்டாலின் உடனடியாக மேடை ஏறிவிடவில்லை. நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்களின் கூட்டத்திற்குள் ஊடரறுத்துச் செல்கிறார். அரைமணி நேரம் பந்தல் மேடையை ரவுண்ட் வந்த ஸ்டாலின் மக்களின் வரவேற்பை ஏற்று பதில் வணக்கம் வைத்து நலம் விசாரித்த போது கூட்டத்தில் ஆரவாரம்.

 

ஆண்டாண்டு காலம் என்ன நேற்று வரை கழகங்களின் தலைவர்கள் ஏரியா நிகழ்ச்சியில் பொருட்டு வருகிற சமயம், மேடை தாங்காமல் சேர்கள் போடப்பட்டு கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்களால் ஆக்கிரமிக்கபட்டிருப்பது மரபாகவேபின் பற்றப்பட்டிருக்கிறது. அது போன்று மேடையில் அடை அடையான நிர்வாகிகளின் அமர்வுகள் மக்களின் பார்வையைத் திசை திருப்புவதாகவுமிருந்திருக்கிறது.

 

இம்முறை மேடையில் அப்படிப்பட்ட சேர் குவிப்புகளில்லை. அத்தனை பெரியமேடையில் ஸ்டாலின் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறார். அவர்தவிர அந்த மேடையில் தொடர்புடைய மா.செ. மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இது போன்ற மாறுபட்ட கோணம் அமைப்பு மக்களின் கவனத்தை ஈர்த்ததுடன் அவர்களின் பார்வையில் ஸ்டாலின் மட்டுமே பளிச்சிடுகிறார்.

 

பக்கவான பொறியியல் தன்மையுடன் அமைக்கப்பட்ட மெகாபந்தலமைப்பு வரும் மக்களை, கட்சியின் நிர்வாகிகள் எம்.எல்.ஏ.க்களை அமரவைப்பதில் முறையான வடிவமைப்பு இப்படி மக்களால் ஈர்க்கப்பட்ட கட்டமைப்பில் கட்டுப்பாடுகளைக் கொண்ட நாசூக்கான அணுகுமுறைகள், என அத்தனை பணியிலும் தி.மு.க.வின் நான் உங்கள் பின்னே (ஐ.பேக்) அமைப்பின் மிளிரல்கள் எதிரொலித் தான்.

 

இது போன்ற கவரும் தன்மை கொண்ட கட்டமைப்புகளை மனதில் கொண்ட ஸ்டாலின் புன்சிரிப்போடு ''நான் ரெடி நீங்கள் ரெடியா'' என்று மக்களைப் பார்த்துக் கேட்டதில் ஆயிரம் அர்த்தங்கள் வெளிப்பட்டன.

 

 "I am not an actor ... I am a realist" - Stalin's speech

 

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் உங்களை கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். நீங்கள் தருகிற மனுக்களுக்கு நம்பருடன் கூடிய ஒப்பதைச் சீட்டு தரப்படும். ஒரு வேளை உங்களின் கோரிக்கை மனுக்கள் கவனிக்கப்படாமல் போகுமேயானால் அந்த நம்பருடன் கூடிய அட்டையை எடுத்துக் கொண்டு என்ன வந்து சந்திக்கலாம். அதில் இடையூறே வராது என்று ஸ்டாலின் நெத்தியடியாகச் சொன்ன போது கூட்டத்தில் ஆரவாரம்.

 

தொடர்ந்து பெட்டியில் போடப்பட்ட மக்களின் கோரிக்கையின் அட்டைகளை எடுத்தவர் அதிலுள்ள பெயர்களை வாசித்தவர் அவர்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசச் சொன்னார்.

 

 "I am not an actor ... I am a realist" - Stalin's speech

 

கோவில்பட்டியின் பார்வதி என்ற இளம் பெண் தங்கள் பகுதிக்கு வரும் குடி தண்ணீரில் உப்பு மற்றும் கேல்சியத் தன்மையோடு வருவதால் அதை அருந்துகிற எங்கள் பகுதிமக்களுக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு அவஸ்தைப்படுவதைச் சொன்ன போது,

 

நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது உலக வங்கயின் நிதி உதவியுடன் ஒகேனேக்கல் கூட்டுக் குடிநிர்த் திட்டம் கொண்டு வரப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பத்துமாதத்தில் குடிநீர் திட்டம் முடிக்கப்பட்டது. ஆட்சி வந்ததும் பாதுகாக்கப்பட்ட குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்படும் என்றார்.

 

அடுத்து தூத்துக்குடியின் ராபர்ட், நாட்டுப்படகுத் தொடர்பான பிரச்சினை தூண்டில் வளைவு முடக்கப்பட்டது பற்றித் தெரிவித்தவருக்கு உத்தரவாதம் கொடுத்தார் ஸ்டாலின். இது போன்று சாம்பிளுக்கு பலரின் மனுக்கள்பற்றி தெரிவிக்கப்பட்டு உரிய நிவாரண உறுதியையும் தந்தார் ஸ்டாலின்.

 

 "I am not an actor ... I am a realist" - Stalin's speech

 

இங்கே அமைச்சராகவும் எம்.எல்.ஏ.வாகப் பத்து வருடங்கள் அதிகாரத்திலிருந்தவர் கடம்பூர் ராஜ். தொகுதிப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டாரா? கலைஞரால் இந்த நகருக்குக் கொண்டு வரப்பட்ட 2 வது பைப் லைன் முற்றுப் பெறாமலா முடக்கப்பட்ட நிலைதானே என்று பஞ்ச் வைத்த ஸ்டாலின்,

 

23 வது வயதில் மிசா கொட்டடியில் அடைக்கப்பட்டவன் 1993-ல் குடி நீருக்கான போராட்டத்தில் சிறை சென்றிருக்கிறேன். மொழிப் போர் காலத்தில் பல முறை கைது செய்யப்பட்டடு சிறை, இப்படி சிறை வாழ்க்கைப் பின்னணியில் வந்தவன் தான் ஸ்டாலின். தேர்தலுக்காக விவசாயி மகன் என்று அவர்தான் நடிக்கிறார் என்னை நடிகன் என்று சொல்கிறார்.

 

நான் நடிகன் அல்ல... யதார்த்தவாதி என்று விளாசினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.