
இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவர் கணவனுக்கு 'நான் வேறொருவரை திருமணம் கொண்டேன் என்னை தேடி வர வேண்டாம்'' என புகைப்படத்துடன் மெசேஜ் அனுப்பிய நிலையில் போலீசாரிடம் கணவன் புகாரளித்த சம்பவம் திண்டுக்கல்லில் நிகழ்ந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ளது எட்டிகுளத்துபட்டி. இக்கிராமத்தில் வசித்து வந்த ஆனந்த் என்ற 30 வயது இளைஞர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வீரஅழகு என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்ட நிலையில் குழந்தை இல்லாததால் அடிக்கடி அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தாய் வீட்டில் வசித்து வந்தார் வீர அழகு. திடீரென ஆனந்தின் வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்த வீர அழகு ''நான் வேறொருவரை திருமணம் கொண்டேன் என்னை தேடி வர வேண்டாம்'' என்று இரண்டாவது திருணம் செய்துகொண்ட நபருடன் இருக்கும் புகைப்படத்தை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்த் மனைவியை மீட்டுத்தரும்படி வடமதுரை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.