தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக சசிகலா கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாஉடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகிய நிலையில், இது குறித்து அவர் விளக்கம் அளித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,
“இறைவன் ஆசியோடும்,ஜெயலலிதா ஆசையோடும், தொண்டர்களின் வாழ்த்துகளோடும்நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன்.சிறையில் நன்னடத்தை விவகாரத்தில் சட்ட ரீதியாக முடிவு எடுப்பார்கள் என நம்புகிறேன்.அபராத தொகையை செலுத்த ஏற்பாடு செய்யப்படும். 2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு விவகாரத்தில் கியூவ்ரேடிவ்மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசித்து செயல்பட வேண்டும்” எனவும்அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.