dmk

தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால்,தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரச்சாரம்,கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனதீவிரம் காட்டி வருகின்றன. இந்தத் தேர்தல் சூழ்நிலையில், தனது 68வது பிறந்தநாளை ஒட்டிஇன்று (01.03.2021) காலைசென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

Advertisment

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுகதலைவர் ஸ்டாலின், ''எனக்கு நேரிலும்தொலைபேசியிலும் பிறந்தநாள் வாழ்த்துகள்தெரிவித்த அனைவருக்கும் நன்றி. வரும் 7 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும்திமுகமாநாட்டில்தமிழகத்தின் 10 ஆண்டுகளுக்கான எனதுதொலைநோக்கு பார்வையை அறிவிக்கஉள்ளேன்.இதுவரை தமிழக மக்களிடம் நடத்தியசந்திப்புகள், திமுக மூத்த நிர்வாகிகள், நடுநிலையாளர்கள், பல்துறை அறிஞர்கள் ஆகியோருடன் பலகட்டங்களாக நடத்தப்பட்டகலந்துரையாடல்களை எல்லாம் தொகுத்து இந்த தொலைநோக்கு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதத்தில் ஆட்சிமாற்றம்நடைபெறும்,” என்றார்.