Advertisment

"நான் பிஜேபி காரன் தெரியுமா" கள்ள நோட்டு வைத்திருந்தவர் திமிர் பேச்சு! 

தஞ்சாவூர் மாவட்டம் செந்தலைப்பட்டினத்தில் இரண்டு இளைஞர்கள் கள்ள நோட்டை மாற்ற முயன்ற போது அவர்களை பிடித்து பொது மக்கள் போலீஸிடம் ஒப்படைத்தனர். அதாவது, செந்தலைப்பட்டினம் கிழவிக்கடை தெருவில் உள்ள யாசின் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் 2000 ரூபாயை கொடுத்து இரண்டு இளைஞர்கள் பொருட்களை வாங்கி விட்டு சென்றுள்ளனர். பின்பு அவர்கள் கொடுத்த அந்த 2000 ரூபாய் நோட்டில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே அந்த கடை உரிமையாளர் அப்பகுதி இளைஞர்களுடன் சேர்ந்து அந்த இரண்டு நபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

Advertisment

tanjore

tanjore incident

அவர்களிடம் விசாரித்த போது பெரும் அதிர்ச்சி தகவல் வெளியானது. இது போல் பல ஊர்களில் ரூ.2000 கள்ள நோட்டை மாற்றி பொருட்கள் வாங்கியது தெரியவந்தது. இதற்கிடையே "நாங்க யார் தெரியுமா" நாங்க பாஜக காரன் அப்படினு திமிராக பேசியுள்ளார்கள். மேலும் நாங்க பிஜேபி எனவே எங்களை விட்டுவிடுங்கள் என தெரிவித்தனர். ஆனால் அப்பகுதி மக்கள் அவர்களை விடாமல் அங்கிருந்த ஒரு பெட்டிக்கடையினருகே அமர வைத்தனர். பின்பு அருகிலிருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து போலிசாரிடம் அந்த இரு நபர்களையும் பொது மக்கள் ஒப்படைத்தனர். தமிழகத்தில் சமீப காலமாக 2000 ரூபாய் கள்ள நோட்டு அதிகமாக வருவதாக கடைக்காரர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment
accused money politics Tanjore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe