Advertisment

ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் கருத்து கூறினால் மட்டும் போதாது களத்தில் இறங்கி போராட வேண்டும்; திருவாரூரில் பேரா.ஜெயராமன்

ஹைட்ரோகார்பன் திட்டத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டும். கருத்து தெரிவித்தால் மட்டும் போதாது, களத்தில் இறங்கி போராட வேண்டும் என்றார் மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் பேராசிரியர் ஜெயராமன்.

Advertisment

The hydrocarbon issue is not enough to comment on the field To fight; Pera Jayaraman at Thiruvarur

திருவாரூரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் தமிழர் தன்மானப்பேரவை சார்பில் நடைபெற்றது. அங்கு நூல் ஒன்றை மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் பேராசிரியர் ஜெயராமன் வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,"மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு 2013ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்து வருகிறது. ஆனால், இந்திய அரசு காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் நோக்கத்தோடு தொடர்ந்து இந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை காவிரி டெல்டாவில் மூன்று சுற்றுகளாக செயல்படுத்த இருக்கிறார்கள். புதுச்சேரிக்கு உட்பட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டிப்பாக அனுமதிக்க முடியாது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துவிட்டார்.

Advertisment

தமிழக அரசு மிகத் தெளிவாக இந்தத் திட்டத்தை அனுமதிக்க முடியாது மத்திய அரசு திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இந்தப் பிரச்சினையின் தீவிரம் தெரியாமலேயே பலர் அமைதியாக இருந்து கொண்டிருக்கிறார்கள். 2016 க்கு முற்பட்ட அனைத்து கிணறுகளும் ஒற்றை உரிமத்தின் கீழ் கொண்டுவரப்படும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது அப்படியானால் ஒட்டுமொத்த காவிரிப்படுகையும் காணாமல் போய்விடும்.

இந்த பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும். கருத்து தெரிவித்தால் மட்டும் போதாது, களத்தில் இறங்கி போராட வேண்டும். எனவே இந்தத் திட்டத்தை கைவிடக் கோரி இந்திய அரசை வற்புறுத்த தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்." என தெரிவித்தார்.

protest Puducherry Hydro carbon project
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe