ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ளஅரசாணைகுறித்துபி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளதாவது,

Advertisment

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்தது. இதனை எதிர்கொள்ள முடியாத மத்திய அரசு, அனுமதி கொடுப்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என ஹைட்ரோகார்பன் திட்ட இயக்குநர் ஜெனரல் வாயிலாக கடிதம் மூலம் தெரிவித்தது.

Hydrocarbon Emergency Act ... karupannanan must be removed from cabinet! PR Pandian Emphasis

இதனையடுத்து போராட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது ஏற்கனவே இருந்த சட்ட வழிகாட்டு முறைகளில் மாற்றம் செய்து மக்கள் கருத்துக் கேட்காமல், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு சட்டத்தில் மாற்றம் செய்து கடந்த 16ம் தேதி அரசாணைவெளியிட்டது.

Advertisment

இதனை கைவிட வலியுறுத்தி தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென போராட்டங்கள் தீவிரமடைந்ததை தொடர்ந்து இதனை கைவிட வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மத்திய அரசிற்கு அவசரமாக கடிதம் எழுதினார்.

இந்நிலையில் கடந்த 2018 அக்டோபர் 9ம் தேதியே அன்றைய மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் மக்கள் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தும் போது எதிர்ப்புகள் வலுப்பதால் அனுமதி வழங்க முடியவில்லை. எனவே மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தாமல் நேரிடையாக மத்திய அரசே அனுமதி வழங்க வேண்டுமென தமிழக அமைச்சர் கருப்பண்ணன் கடிதம் மூலம் வலியுறுத்தியதாகவும், அதனடிப்படையில்தான்தற்போது புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இதன் மூலம் தமிழக அரசுக்கும், மக்கள்நலனுக்கும் எதிராக அமைச்சர் கருப்பண்ணன் செயல்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இச்செயல்பாடு மூலம் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறதா? என அஞ்ச தோன்றுகிறது.

Advertisment

இது குறித்து தமிழக அமைச்சரவை அனுமதி பெற்று கடிதமளித்தாரா? இல்லையா? என்பதையும் முதலமைச்சர் தனது நிலையை தெளிவுப்படுத்த வேண்டும். கடிதமளித்தது உண்மையென்றால் கருப்பண்ணனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்றார்.