ஹைட்ரோ கார்பன், தேசிய மருத்துவ மசோதாவை கண்டித்து புதுச்சேரி, கடலூரில் ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தை, புதுச்சேரியை அழிக்கபோகும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடவேண்டி புதுச்சேரி யூனியன் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மருத்துவத் துறைக்கும், மருத்துவ மாணவர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்துகடலூரில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில், பழைய ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல்குடியிருப்பு பகுதிகளில் தனியார் செல்போன் டவர் அமைப்பதை கண்டித்து கடலூர் டாக்ஸி ஸ்டாண்ட் அருகில் அனைத்து குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Cuddalore Hydro carbon project Medical protest Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe