The hut was burnt down during the boogie celebration

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் பழைய குப்பை கூளங்களை எரித்து போகி கொண்டாடிய போது ஏற்பட்ட தீயானது ஒரு வீட்டின்மாடி மேல் அமைக்கப்பட்டிருந்த குடிசை வீட்டின்மீது பரவி, அந்தக் குடிசை முற்றிலும் எரிந்து நாசமானது.

சுரேஷ் என்ற நபர் போகி பண்டிகையை முன்னிட்டு வீட்டிலிருந்த பழைய பொருட்கள் மற்றும் குப்பைகளை எரித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக தீயானது அருகில் உள்ள மாடி வீட்டில் அமைக்கப்பட்டிருந்த குடிசை மீது பரவியது.

உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத்தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், குடிசையானது முற்றிலும் எரிந்து நாசமானது.