Advertisment

வளர்ப்பு மகன் விபத்தில் பலி...தந்தை-தாய் தற்கொலை முயற்சி...!

சென்னை புளியந்தோப்பு நாச்சாரம்மன் லேன் பகுதியை சேர்ந்தவர் லட்சுமிபதி(60). இவருடைய மனைவி தனலட்சுமி(55). 1990ல் திருமணம் ஆன இவர்களுக்கு குழந்தை இல்லாததால் 16 வருடத்திற்கு முன்பு சந்தான கிருஷ்ணன் என்ற மகனை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

Advertisment

Husband-wife-incident

கடந்த வருடம் ஜனவரி மாதம் 5ஆம் தேதி சந்தான கிருஷ்ணன் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட தம்பதி, நேற்று முன்தினம் சந்தான கிருஷ்ணனுக்கு முதலாம் ஆண்டு திதி கொடுத்துள்ளனர்.

பின்னர் இரவு மகன் இறந்த சோகத்தில் இருந்த இருவரும் நீரிழிவு மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். காலையில் வீட்டிற்குள் சென்று பார்த்த உறவினர்கள், மயக்க நிலையில் இருந்த இருவரையும் மீ்ட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த புளியந்தோப்பு போலீசார், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

incident wife husband
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe