Advertisment

கணவனை கொன்ற மனைவி! 9 மாதங்களுக்கு பிறகு காதலனுடன் கைது!

virudhachalam

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இருப்பு கிராமத்தில் உள்ள செல்வராஜ் என்பவரது முந்திரி காட்டில் கடந்த 13.7.2019 அன்று உடல் முழுவதும் எரிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத சடலம் கிடப்பதாக ஊமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் வந்தது.

Advertisment

தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற ஊமங்கலம் காவல் துறையினர், அடையாளம் தெரியாமல், எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஊமங்கலம் காவல் துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ்ஸ்ரீ உத்தரவின் பேரில், நெய்வேலி காவல்துணை கண்காணிப்பாளர் லோகநாதன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் சுஜாதா உள்ளிட்ட குழுவினர் தீவிர விசாரணைமேற்கொண்டு வந்தனர்.

Advertisment

கடந்த ஒன்பது மாதங்களாக தீவிர விசாரணையை மேற்கொண்டுவந்த காவல்துறையினருக்கு, பல்வேறு முயற்சியினால், முற்றிலுமாக எரிந்த நிலையில் கிடந்த நபர், கடலூர் அருகேயுள்ள மேற்கு ராமாபுரத்தை சேர்ந்த ஸ்ரீதரன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீதரன் மனைவி சுதாவிடமும், அதே பகுதியை சேர்ந்த சிவராஜ் என்பவரிடமும் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

இவ்விசாரணையில் ஸ்ரீதரன் மனைவி சுதாவும், சிவராஜ் என்பவர் தனிமையில் இருப்பதை ஸ்ரீதரன் பார்த்துள்ளார். இதனால் செய்வதறியாமல் சுதா மற்றும் சிவராஜ் ஆகிய இருவரும் ஸ்ரீ தரனை கடுமையாக தாக்கி கொன்றுள்ளனர். பின்னர் அவரது உடலை காரில் எடுத்துக்கொண்டு விருத்தாசலம் அடுத்த இருப்பு கிராமத்தில் உள்ள முந்திரி காட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது. அதையடுத்து சுதா, சிவராஜ் இருவரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களை சிறையிலடைத்தனர். ஒன்பது மாத காலமாக தொடர் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு, சிறப்பாக பணியாற்றி குற்றவாளியை கைது செய்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் வெகுவாகபாராட்டி வருகின்றனர்.

virudhachalam police boyfriend wife incident husband
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe