Advertisment

ஒரே கயிற்றில் கணவன் - மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை

கோவை அருகே குடும்ப பிரச்சனை காரணமாக ஒரே கயிற்றில் கணவன் - மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

Coimbatore

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகேயுள்ள பொண்ணான்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கேசவராஜ். இவர் தனியார் பைப் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் நிலகீரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த கிருத்திகா என்பவருக்கும் ஒராண்டிற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் கேசவராஜின் தந்தை ஜெய்சங்கர் மற்றும் தாயாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு மேலாகியும் கேசவராஜ், கிருத்திகா தங்கியிருந்த அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தார் ஜன்னலை உடைத்து பார்த்தனர். அப்போது கேசவராஜ், கிருத்திகா இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Advertisment

இதுகுறித்து தகவலறிந்த கருமத்தம்பட்டி காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி, உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இருவரும் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Coimbatore District
இதையும் படியுங்கள்
Subscribe