Advertisment

மனைவியையும் குழந்தையையும் எரித்துக்கொல்ல முயன்ற கணவன் - திருவாரூரில் பரபரப்பு

fi

திருவாரூரில் வரதட்சனைக்கேட்டு மனைவியையும் குழந்தையையும் அரிவாளால் வெட்டி மண்ணெண்ணெய் ஊற்றி கொல்ல முயற்சித்த கனவனிடமிருந்து தப்பி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தது பலரையும் கலங்கடித்துள்ளது.

Advertisment

திருவாரூர் வாசன் நகரில் வசித்து வருபவர் கிஷோர்ராஜா(28). இவர் காட்டூர் என்ற இடத்தில் கார் பரிசோதனை மையம் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 2016ம் ஆண்டும் மன்னார்குடி பைங்காநாடு கிராமத்தை சோ்ந்த ஜெயநந்தினி வயது 24க்கும் திருமணம் நடைபெற்று 2 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.

Advertisment

இந்நிலையில் ஜெயநந்தினியை அவரது கணவர் கிஷோர்ராஜா மற்றும் குடும்பத்தினர் வரதட்சனை கேட்டு அடிக்கடி மிரட்டி வந்துள்ளனர். இதனையடுத்து ஜெயநந்தினி பணம் பெறுவதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு தந்தை ஊருக்கு சென்று இன்று திரும்பி உள்ளார். அவரிடம் கணவனும், மாமியார், மாமனார், நாத்தனார், பணம் வாங்கிட்டு வந்தியா என கேட்டுள்ளனர். பணமில்லை என ஜெயநந்தினி நடுங்கிய குரலில் கூற தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கணவன் கிஷோர்ராஜாவும் தாயார் ராணியும் அரிவாளை கொண்டு ஜெயநந்தினியை வெட்டியுள்ளார். அதோடு கிஷோர்ராஜா குடும்பத்தினர் ஜெயநந்தினி மீதும் குழந்தை மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இந்த கோர சம்பவத்தில் இருந்து தப்பி காயங்களுடன் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக, தானே அனுமதியாகி உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த நகர காவல்துறையினர் மருத்துவக்கல்லூரிக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் ஜெயநந்தினியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வரதட்சனைக்காக தன்னை கொல்ல முயன்றதாகவும் அவர்களிடமிருந்து தப்பி வந்துவிட்டதாகவும் ஜெயநந்தினி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். திருமணமாகி இரண்டு ஆண்டுகளில் வரதட்சனை கேட்டு கொல்ல முயற்சி நடைபெற்ற சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

mannagudi Thiruvarur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe