Advertisment

மனைவியைப் பிரிந்த கணவர் மரணம்!

husband who separated from his wife passed away

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர், கள்ளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (49). இவரது மனைவி தமிழ்செல்வி (39). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். வெங்கடாசலம், மனைவி குழந்தைகளுடன் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகே உள்ள பழையபாளையத்தில் வசித்து வந்தார். அவ்வப்போது கிடைக்கும் வேலைகளுக்கு சென்றுவந்த வெங்கடாசலத்துக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன்மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Advertisment

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தமிழ்ச்செல்வி தனது குழந்தைகளுடன் கணவரைப் பிரிந்து சென்று கரூரில் தங்கி அங்குள்ள மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்றதால் மனவேதனையடைந்த வெங்கடாசலம் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்துள்ளார். நேற்று முன் தினம் இரவு, வீட்டின் வெளியில் இருந்த கட்டிலில் பேச்சு மூச்சின்றி வெங்கடாசலம் கிடந்துள்ளார்.

Advertisment

இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் ஏற்கெனவே வெங்கடாசலம் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து, தமிழ்ச்செல்வி நேற்று அளித்த புகாரின் பேரில், அரச்சலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

police namakkal
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe