Advertisment

மனைவியுடன் தகராறு; கணவர் எடுத்த விபரீத முடிவு

husband who lost their life in a dispute with his wife

திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் திலகர் தெருவை சேர்ந்தவர் கமுருதீன். இவரது மகன் அன்சர் அலி. இவருக்கு திருமணம் ஆகி சபானா பானு என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அன்சர் அலி திருச்சி திருவரங்கம் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், மனைவிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்த விரக்தியில் கடந்த 10 நாட்களாக அன்சர் அலி வேலைக்கு செல்லாமல் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அன்சர் அலி வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இது குறித்த அவரது தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

husband police trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe