Skip to main content

‘இறைவனாய் தந்த இறைவியே..’ - மனைவிக்கு கோயில் கட்டிய கணவர்

 

 husband who builds a temple for his wife

 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மாங்கானூர் தக்டிவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 35 ஆண்டுகள் ஆகின்றன. மூன்று மகன்கள் உள்ளனர். 

 

கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி ஈஸ்வரி இயற்கை மரணம் அடைந்துள்ளார். மனைவி இறந்த துக்கத்தில் சுப்பிரமணி வேதனையடைந்து வருகிறார். ஷாஜகான், தன் மனைவி மும்தாஜுக்காக தாஜ்மஹால் கட்டியது போல், சுப்பிரமணியும் தன் மனைவிக்காக அவருக்கு சொந்தமான நிலத்தில் 15 சென்ட் இடத்தில் 15 லட்ச ரூபாய் மதிப்பில் 6 அடி உயரத்தில் ஈஸ்வரியின் உருவச்சிலையை நிறுவி கோவில் ஒன்றை சில வாரங்களுக்கு முன் கட்டியுள்ளார். 

 

இறந்தவரை வணங்கி மரியாதை செய்வது தமிழர்கள் பண்பாடு. அதுபோல் தினமும் இவர் மனைவியை வணங்கி வருகிறார். மனைவிக்கு சிலை அமைத்துள்ளார் என்கிற தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் வியப்புடன் வந்து பார்த்து செல்கின்றனர். மனைவி இறந்த சில நாட்களில் துணை தேடும் காலத்தில், வாழும் காலத்தில் மனைவி காட்டிய அன்பை, பாசத்தை மறக்க முடியாமல், இறந்த மனைவிக்கு சிலை அமைத்து கோயில் கட்டி தினமும் வணங்கிவரும் நிகழ்கால ஷாஜகானாக வாழ்கிறார். வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி முதலாம் ஆண்டு நினைவு நாளில் 500 பெண்களுக்கு இலவச சேலை மற்றும் அன்னதானம் வழங்கவும் சுப்பிரமணி முடிவு செய்துள்ளாராம். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !