தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ளது புங்குவார் நத்தம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு மாரியம்மாள் (வயது 45) என்ற மனைவியும், மூன்று மகள், இரண்டு மகன்கள் என 5 பிள்ளைகள் உள்ளனர். இதில் நான்கு பேருக்கு திருமணம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ottapidaram

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

மாரியம்மாள் அவ்வூரில் ஊராட்சி துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். அவர்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் குடியிருந்த ராமமூர்த்தி (28 வயது )ஊராட்சி வாட்டர் டேங்க் இயக்குபவராக பணி செய்து வந்துள்ளார். இதனால் மாரியம்மாளும் ராமமூர்த்தியும் அடிக்கடி சந்திக்கும் நிலை ஏற்ப்பட்டது. நெருங்கிப் பழகியதால் இருவருக்கும் கள்ளக்காதல் உருவானது. சண்முகம் தொழில் காரணமாக அடிக்கடி வெளியூர் செல்லும்போது, மாரியம்மாளும் ராமமூர்த்தியும் மாரியம்மாள் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த விஷயம் மாரியம்மாள் கணவர் சண்முகத்துக்கு தெரியவந்ததும், அவர் பலமுறை மனைவி மாரியம்மாளை எச்சரித்துள்ளார். மாரியம்மாள் அவர் வார்த்தையை பொருட்படுத்தவில்லை. கடந்த 15ஆம் தேதி சண்முகம் மேளக்கச்சேரிக்கு வெளியூர் செல்வதாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். இரவு அவர் மது அருந்திவிட்டு போதையில் தள்ளாடியபடி வீட்டுக்கு வந்துள்ளார். போதையின் உச்சத்தில் வீட்டுக்கு வெளியே படுத்து தூங்குவது போல் சண்முகம் நடித்துள்ளார்.

Advertisment

சண்முகம் உண்மையிலேயே போதையில் தூங்குவதாக நினைத்த எதிர்வீட்டு ராமமூர்த்தி, நடு இரவு ஒரு மணி அளவில் மாரியம்மாள் வீட்டுக்குள் சென்று தனி அறையில் மாரியம்மாளுடன் உல்லாசமாக இருந்துள்ளார். தூங்குவது போல் நடித்த ராமமூர்த்தி சத்தமில்லாமல் உள்ளே சென்று தயாராக வைத்திருந்த வீச்சரிவாளை கையில் எடுத்துள்ளார். இதைப்பார்த்த மாரியம்மாளும் ராமமூர்த்தியும் அதிர்ச்சி அடைந்தனர். அதற்குள் சண்முகம் இருவரையும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டார். இரவு வரை வீட்டிலேயே இருந்து விட்டு, மறுநாள் காலை பசுவந்தனை காவல்நிலையம் சென்று தன் மனைவியையும் கள்ளக் காதலனையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு சண்முகம் சரணடைந்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.