Husband stabs wife in Tiruppathur

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலப்பட்டு அடுத்த கல்லுகுட்டை பகுதியைச் சேர்ந்த பிரகாசம் மகன் பிரவீன் (32). இவர் சென்னையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகள் நந்தினி (28) என்பவருக்கும் பிரவீனுக்கும் திருமணம் நடைபெற்று குழந்தைகள் ஏதும் இல்லாத நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கணவனிடமிருந்து பிரிந்து நந்தினி தனது அம்மா வீட்டில் தங்கி திருப்பத்தூர் அருகே புதுப்பேட்டையில் இயங்கும் ஸ்ரீராம் பைனான்ஸில் டாக்குமெண்ட் ஸ்டாப்பாக வேலையும் செய்து வந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், கணவன் பலமுறை தனது மனைவியை தன்னுடன் வாழ அழைத்தும் வராத காரணத்தினால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த பிரவீன், மனைவி வேலை செய்யும் இடத்திற்கே சென்று தனது மனைவியை தனியாக அழைத்து தன்னிடம் வர அழைத்துள்ளார். ஆனால், மனைவி வர மறுத்து அவமானப்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமானவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக மனைவின் உடம்பில் பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார். இதனால் மனைவி அலறி உள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு நந்தினியை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தன் மனைவியை குத்தியதால் கணவன் பிரவீனுக்கும் கையில் காயம் ஏற்பட்டதால் அங்கேயே அமர்ந்திருந்தார். இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் நகர போலீசார் பிரவினை அழைத்து வந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளித்தனர். கருத்து வேறுபாடு காரணத்தால் கணவன் மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment