Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; காணாமல் போன மனைவி, மகள்

Published on 11/11/2022 | Edited on 11/11/2022

 

Husband police complaint missing wife

 

தூத்துக்குடி - மாதா நகரில் மாரிமுத்து என்பவர் மனைவி அழகு ராணி மற்றும் 5 வயது மகளுடன் வசித்து வந்தார். அழகு ராணியின் பேச்சைக் கேட்டு தூத்துக்குடியிலிருந்து சாத்தூர் அருகேயுள்ள வாழவந்தாள்புரத்துக்கு 2019-ல் குடும்பத்துடன் குடியேறினார். இறந்து போன தன் தம்பியைப் போலவே இருக்கிறார் எனச் சொல்லி தூத்துக்குடி - தட்டப்பாறையைச் சேர்ந்த பாண்டியுடன் செல்போனில் அழகு ராணி பேசி வந்திருக்கிறார்.  

 

அழகு ராணியைச் சந்திப்பதற்கு அடிக்கடி சாத்தூர் வீட்டுக்கு வந்து போக இருந்திருக்கிறார் பாண்டி. தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் லைன் வீட்டில் வசித்து வரும் தன் கணவரான மாரிமுத்துவிடம், “பாண்டியுடன் ஏற்பட்ட பழக்கத்தால் நான்கு மாத கர்ப்பமாக இருக்கிறேன்...” என்று கூறியிருக்கிறார் அழகு ராணி. உடனே கோபத்தில் சத்தம்போட்ட மாரிமுத்து தனது மாமனார், மாமியாரிடம் அழகு ராணியின் தவறான நடவடிக்கை குறித்துப் பேசியிருக்கிறார்.

 

இந்நிலையில், பெற்றோர் அறிவுரை கூறியும்  கேட்காத அழகு ராணி தனது 5 வயது மகளுடன் வீட்டைவிட்டு சென்றுவிட்டார். இருவரையும் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், பாண்டி மீது சந்தேகப்படுவதாகவும் கண்டுபிடித்துத் தரவேண்டியும் அம்மாபட்டி காவல்நிலையத்தில் மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவாகியிருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஏ.வி. ராஜு மீது கருணாஸ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Complaint against AV Raju in Karunas Police Commissioner's office

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளைத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்திருந்தார். அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு த்ரிஷாவுக்கு ஆதரவாக சேரன், ஃபெப்சி அமைப்பு, மன்சூர் அலிகான், விஷால் உள்ளிட்டவர்கள் பேசினார்கள். இதனைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே ஏ.வி. ராஜு, “என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில், சில ஊடகங்களில் திரைப்படத் துறையினரை அவதூறாக நான் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நான் பேசியது அரசியல் ரீதியாக மட்டும் தான் பேசினேன். அந்த இடத்தில் பேட்டியை முடித்த பின்பு ஒரு சிலர் கேட்ட கருத்துக்கு நான் அந்த விளக்கத்தை சொன்னேன். எந்த இடத்திலும் திரைத்துறையினரை வருத்தப்படும் அளவிற்கு பேசக் கூடியவர் நான் அல்ல.

ஒருவேளை அப்படி பேசியதாக தகவல்கள் உங்களுக்கு தவறாக கிடைத்திருந்தால், நான் உங்கள் அனைவருக்கும், பெப்சிக்கும், திரைப்பட நடிகர் சங்கத்திற்கும் மற்றும் சம்பந்தப்பட்ட திரிஷாவுக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவேளை மனம் புண்படும்படி இருந்திருந்தால் என் சார்பாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என வீடியோ வெளியிட்டிருந்தார். 

கூவத்தூர் விவகாரத்தில் த்ரிஷாவை சம்பந்தப்படுத்தி பேசியபோது கருணாஸ் குறித்தும் பேசியிருந்தார். இந்த நிலையில், ஏ.வி. ராஜு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். மேலும் அவரது பேட்டியை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.