/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4216.jpg)
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் கடந்த 19.03.2023 அன்று எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அடையாளம் தெரியாத அந்த சடலம் குறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தைச் சேர்ந்த பிரகாஷ் (43) என்பவரைக்காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் ஆகியுள்ளது. அதன் காரணமாக எரிந்த இந்த ஆண் சடலம் பிரகாஷாக இருக்கலாம் என சந்தேகித்த போலீஸார், அவரது மனைவி லட்சுமியை (36) அழைத்து வந்து அடையாளம் காட்டச் சொல்லியுள்ளனர். அவரும் அது தன் கணவர் தான் என அடையாளம் காட்டியுள்ளார்.
தொடர்ந்து போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பிரகாஷின் மனைவியையும் காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அதில்,தன் கணவர் பிரகாஷை தானே கட்டையால் அடித்துக் கொலை செய்ததாக லட்சுமிஒப்புக்கொண்டுள்ளார். போலீஸார் அவரிடம் நடத்திய மேல் விசாரணையில், பிரகாஷ் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததால் தாங்க முடியாமல், சம்பவத்தன்று வீட்டில்தூங்கிக் கொண்டிருந்தவரை கொன்றதாகக் கூறி உள்ளார்.
மேலும், கொலை செய்யப்பட்ட பின் லட்சுமி தனது நண்பரான ஓசூர் அடுத்த கொத்தக்கோட்டா கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் (38) என்பவரை தொடர்புகொண்டு அவர் உதவியுடன் டாட்டா ஏஸ்வாகனத்தில் பிரகாஷின் உடலை எடுத்துக்கொண்டு சானமாவு வனப்பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்ததும் தெரியவந்துள்ளது. 2 மாதங்களாகபோலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையின் அடிப்படையில் லட்சுமி, சின்னராஜ் ஆகிய இருவரையும்கைது செய்துஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)