Advertisment

மனைவியின் இறுதிச் சடங்கின்போது கணவன் மரணம்..

Husband passes away during wife's funeral

Advertisment

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் பரமசிவம்பிள்ளை (வயது 70). இவரது மனைவி சரஸ்வதி அம்மாள் (65). சரஸ்வதி அம்மாள், நேற்று (02.09.2021) மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். மனைவியின் இறப்பால் பரமசிவம் பிள்ளை, பெரும் சோகத்திலும், கவலையிலும் இருந்தார்.

மாலை சரஸ்வதி அம்மாளின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யும் பணியில் குடும்பத்தினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, துக்கத்தில் இருந்த பரமசிவம் பிள்ளை மாலை 5 மணி அளவில் திடீரென மயங்கி கீழே விழுந்தார். சிறிதுநேரத்திலேயே அவரும் இறந்தார். இதைத் தொடர்ந்து கணவன் - மனைவி இருவருக்கும் ஒரே நேரத்தில் இறுதிச் சடங்கு செய்யப்பட்டு பாலசமுத்திரம் மயானத்தில் அவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. மனைவி இறந்த சிலமணி நேரத்தில் கணவரும் இறந்ததால் அந்தக் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe