Advertisment

திருமணத்தை மீறிய உறவு; மனைவி கண்முன்னே கணவன் கொடூரக்கொலை

Husband passed away in front of wife in Jolarpet

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை அருகே புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 38 வயதான கோவிந்தராஜ். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஈஸ்வரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கின்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும்உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வீட்டைவிட்டு வெளியே சென்ற கோவிந்தராஜ் வீடு திரும்பவில்லை. நேற்று காலை கோபால் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மர்மமான முறையில் உடம்பில், தலையில் காயங்களோடு இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மற்றும் திருப்பத்தூர் டிஎஸ்பி செந்தில்குமார் ஆகியோர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று கொலை குறித்தகாரணம் மற்றும் கொலையாளி யார் என விசாரணை செய்தனர். வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏலகிரி மலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன். திருமணத்தை மீறீய உறவால் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கூறினர். அதனை தொடர்ந்து கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜ் மனைவி ஈஸ்வரியை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருக்கும் கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜனுடைய மனைவி ஈஸ்வரிக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.

ஓராண்டுக்கு முன்பு தனது கணவரையும் இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு கோவிந்தசாமி உடன் ஊரை விட்டு ஓடி உள்ளார் ஈஸ்வரி. மனைவி காணாமல் போனதாக ஏலகிரி போலீசில் கோவிந்தராஜ் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், இருவரையும் தேடி கண்டுபிடித்த போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அதன்பின் கணவர் கோவிந்தராஜுடன் குடும்பம் நடத்தினாலும், மற்றொருபுறம் கோவிந்தசாமி உடனான திருமணத்தை மீறிய உறவை கை விடாமல் தொடர்ந்து வந்துள்ளார் ஈஸ்வரி. இதனால் கணவன் கோவிந்தராஜுக்கும் மனைவி ஈஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் நவம்பர் நான்காம் தேதி நள்ளிரவு, ஈஸ்வரியும் கோவிந்தசாமியும் அருகிலிருந்த விவசாய நிலத்தில் உள்ள ஒரு மாட்டு கொட்டகையில் தனிமையில் இருந்துள்ளனர். நள்ளிரவு வீட்டுக்குள் மனைவி இல்லையே என சந்தேகப்பட்டு தேடிய கணவர் கோவிந்தராஜ், மாட்டு கொட்டையில் இருவரும் இருப்பதை பார்த்து ஆத்திரமாகி அப்போதே சண்டை போட்டுள்ளார்.

எங்க சந்தோஷத்தை கெடுப்பதே நீதான் என அப்பொழுது அங்கிருந்த மண்வெட்டியை எடுத்த கோவிந்தசாமி, ஈஸ்வரி கண் முன்பே அவரது கணவர் கோவிந்தராஜை அடித்து கொலை செய்துள்ளார். அடித்து கொலை செய்துவிட்டு இருவரும் எதுவும் நடக்காதது போல் அவரவர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

கோபால் என்கிற விவசாயி தனது நிலத்துக்கு வந்தபோது மாட்டு கொட்டகை வெளியே கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்டு கிடப்பதே பார்த்துள்ளார்,பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கூறினர். அப்போது வீட்டிலிருந்து சாவகாசமாக கிளம்பி வந்து கொலை செய்யப்பட்டு கிடந்த கணவரை பார்த்து கண்ணீர் விட்டு அழுவது போல் டிராமா செய்துள்ளார் ஈஸ்வரி. ஈஸ்வரியின் வாக்குமூலத்தை தொடர்ந்துஏலகிரி போலீசார், அதே ஊரில் இருந்த கோவிந்தசாமியை கைது செய்துஇருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.

police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe