Advertisment

மனைவி இறந்த சோகத்தில் கணவன் தற்கொலை!

Advertisment

Husband passed away  due to wife deceased

பொன்னேரிஅருகே உள்ள காஞ்சி வாயல் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் தங்கமணி(26) - அபிநயா(22) தம்பதியர். தங்கமணி பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 8 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இதற்கிடையே கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டில் திடீரென அபிநயா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisment

மனைவி இறந்ததால் தங்கமணி மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்தார். அதனால் அவர் யாரிடமும் சரியாக பேசவில்லை. அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள காஞ்சி அம்மன் கோவில் அருகே முட்புதரில் தூக்கில் தொங்கிய நிலையில் தங்கமணி இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி இறந்த சோகத்தில் இருந்த தங்கமணியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. திருமணமான 8 மாதத்தில் கணவன் - மனைவி என இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்து வருகிறது.

Chennai ponneri
இதையும் படியுங்கள்
Subscribe