Advertisment

தண்ணீர் கேட்டு பேசிய வார்டு உறுப்பினரை அவதூறாக பேசிய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர்! 

The husband of the Panchayat Council Chairman slandered the ward member who asked for water!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கே. பந்தாரப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட 4வது வார்டில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வராததால் 4வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கே பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா சரவணனுக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது தொலைப்பேசியை எடுத்து பேசிய ஊராட்சி மன்ற தலைவர் ஜெயாவின் கணவர் சரவணனிடம், 4வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, தன் வார்டில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரவில்லை எனக் கூறியுள்ளார். அதற்கு சரவணன் இதெல்லாம் பிரச்சனைன்னு இன்னொரு முறை பேசன.. என அவதூறாக பேசியதாக கூறுகிறார்.

Advertisment

இதனால் ஆத்திரமடைந்த 4வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, 8வது வார்டு உறுப்பினர் இளமதி ஆகியோர் கே. பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்து ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சரவணனை கண்டித்தும், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயாவுக்கு பதிலாக அவருடைய கணவர் செயல்படுவதை நிறுத்த வேண்டும் எனக் கோரியும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Advertisment

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த கே. பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா, தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் பேசியதால் தர்ணாவில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.‌

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe