Advertisment

நீண்ட நேரம் செல்போனில் பேசும் மனைவி: தட்டிக்கேட்ட கணவன் கொலை

Suicide

நீண்ட நேரம் செல்போனில் பேசும் மனைவிக்கும் கணவனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் திடீரென கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவருக்கு ஜெயா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கூலி வேலை பார்த்து வந்த துரைராஜுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்தது. இரு தினங்களுக்கு முன்பு அவரது மனைவி ஜெயா செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

Advertisment

ஜெயா யாரிடம் பேசுகிறார் என்று அவரது செல்போனை ஆராய்ந்து அந்த நம்பரை சிலரிடம் காட்டி, யாருடைய எண் என்று விசாரித்துள்ளார். அப்போது அந்த எண் ஒரு ஆணுடையது என்று தெரிந்துகொண்டார். ரகசியமாக விசாரித்ததில் ஜெயாவுக்கும். அதே ஊரைச்சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து துரைராஜ் தனது மனைவியை கண்டித்தார். எனவே கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று முன்பு தம்பதிக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த துரைராஜ் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் வீட்டின் வெளியே கட்டிலை போட்டு தூங்க சென்றார். காலையில் துரைராஜ் கட்டில் போடப்பட்டிருந்த இடத்தின் அருகேயுள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் உடையார்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் விரைந்து வந்து தூக்கில் தொங்கிய துரைராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் துரைராஜின் மனைவி ஜெயா தலைமறைவாகி விட்டார். தலைமறைவான ஜெயாவை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

wife husband Suicide
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe