Advertisment

அரசு வேலை, இன்சூரன்ஸ் பணத்துக்கு ஆசைப்பட்டு கணவனை கொன்ற மனைவி டிரைவருடன் கைது

​    ​77

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணை, தபார் துறை ஊழியரான கேசியா நாயக் திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் கேசியா நாயக் இன்னொரு பெண்ணை மணந்தார்.

Advertisment

கணவரின் இரண்டாவது திருமணத்தை விரும்பாத பத்மா, நல்கொண்டா காவல்நிலையத்தில் கணவருக்கு எதிராக புகார் ஒன்றை கொடுத்தார். இதன் காரணமாக இருவரும் 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர்.

Advertisment

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கேசியா நாயக் ஒரு காரை வாங்கியதுடன், அந்த காருக்கு வினோத் என்ற வாலிபரை டிரைவராக நியமித்தார். வினோத்திடம் அறிமுகமான பத்மா, அடிக்கடி கணவரை பற்றி விசாரிப்பார். கணவர் விவாகரத்து பண்ணவில்லை என்பதால், அவரது போட்டுள்ள இன்ஸ்சூரன்ஸ் மற்றும் அவரை கொலை செய்தால், தனக்கு அரசுப் பணி வரும் என்று பத்மா யோசித்துள்ளார்.

இதற்கு உடந்தையாக வினோத்தை தயார் செய்த பத்மா, வினோத்துக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை தந்துவிடுவதாக பேசியுள்ளார். ஆகஸ்ட் 31 ம் தேதி கொலை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, கேசியா நாயக்கை அதிக அளவு மதுபானம் அருந்த வைத்துள்ளார். போதையில் மயக்கமடைந்த கேசியா நாயக்கை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர்.

மேலும் கொலை செய்தது தெரியாமல் இருப்பதற்காக காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படும்படி செய்துள்ளார். விபத்தில் கேசியா நாயக் காலமானார் என்று போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் விபத்தில் இறந்தவருக்கு உடலில் காயங்கள் இல்லை என்று சந்தேகம் அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து வினோத்தை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் இன்ஸ்சூரன்ஸ் பணத்திற்காகவும், கருணை அடிப்படையில் கேசியா நாயக் வேலை தனக்கு வரும் என்று பத்மா இந்த கொலை திட்டத்தை தீட்டினார் என்று போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

driver arrested wife murder husband
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe