Advertisment

மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன் - சென்னை அருகே பரப்பரப்பு!

agfsdgf

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கிராண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் சுப்பிரமணி (வயது 40). இவர் சென்னை வடபழனியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கும் கனிமொழி என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தற்பொழுது மூன்று வயதில் ஒரு மகன் உள்ளார். கனிமொழி அடிக்கடி போனில் பேசுவதைத் தவறாகப் புரிந்து கொண்டு சுப்பிரமணி அவர் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் திருமணத்திற்குப் பின்பு இருவருக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கனிமொழி கணவரைப் பிரிந்து தனது மகனுடன் தனியாகச் சென்றுவிட்டார்.

Advertisment

சென்னை ஐஸ்ஹவுஸ் அருணகிரி தெருவில் கனிமொழியின் தாய் நிர்மலா வசித்து வருகிறார். கணவரைப் பிரிந்த கனிமொழி மகனுடன் தாய் வீட்டிற்குச் சென்று அங்கேயே தங்கியுள்ளார். இந்நிலையில் அடிக்கடி ஐஸ்ஹவுஸில் மாமியார் வீட்டிற்குச் சென்று, தன்னுடன் மீண்டும் வருமாறு கூறி மனைவியுடன் பலமுறை தகராறு செய்து வந்துள்ளார். ஆனால் அதற்குக் கனிமொழி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இருப்பினும் அவ்வப்போது ஐஸ்ஹவுசுக்கு வந்து மனைவியுடன் இரவில் தங்குவதைச் சுப்பிரமணி வழக்கமாக வைத்து இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மனைவியைப் பார்ப்பதற்காக வந்தார். இரவில் அவருடன் வீட்டிலேயே தங்கினார்.

Advertisment

தன்னுடன் குடும்பம் நடத்த வர மறுக்கும் தன் மனைவி மீது கடும் ஆத்திரத்திலிருந்த சுப்பிரமணி அவரை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி நேற்று இரவு 1:15 மணியளவில் கனிமொழி ஆழ்ந்த உறக்கத்திலிருந்த தனது மனைவி மீது கல்லைத் தூக்கிப் போட்டுள்ளார். இதில் தலை சிதறி சம்பவ இடத்திலே கனிமொழி துடித்துப் பலியானார். இது பற்றி தகவல் அறிந்த ஐஷவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் விரைந்து சென்று கனிமொழி உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதன் பின்னர் கனிமொழியைக் கொலை செய்த அவரது கணவரைக் கைது செய்த காவல்துறையினர் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர்.

Chennai Husband and wife incident
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe