/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1000_269.jpg)
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த புதுசூரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல்(26). கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மூணாம்பள்ளியைச் சேர்ந்த இந்துஜா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. வடிவேல் தேங்காய் உரிக்கும் வேலை பார்த்து வந்தார். இந்துஜா புதுசூரிபாளையத்தில் உள்ள அங்கன்வாடியில் வேலை பார்த்து வந்தார்.
வடிவேலுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. கடந்த ஒரு மாதமாக இந்துஜா கணவரைப் பிரிந்து அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் வடிவேலுமன வேதனையில் இருந்துள்ளார். சம்பவத்தன்று புதுசூரிபாளையம் சென்று இந்துஜாவை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். குடிக்காமல் இருந்தால் உங்களுடன் வரத்தாயார் என்று அவர் கூறிவிட்டார். பின்னர் அன்று இரவு வடிவேலுவீட்டில் வைத்திருந்தபூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார். உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த வடிவேலுசிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)